கனடா செய்திகள்

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் 222 பயிற்சியாளர்கள் தொடர்பு

11 Feb 2019

கனடாவில் கடந்த 20 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 222 விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 600 இற்கும் மேற்பட்ட 18 வயதுக்கு குறைந்த வயதினர் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 34 விளையாட்டுத் துறை பயிற்சியாளர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தின் முன்பாக சட்ட நடவடிக்கைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

உதாரணமாக ஒன்டாரியோவைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் சட்னம் ரயாட் கடந்த 2016 ஆம் ஆண்டளவில் பாலியன் வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஒன்பது வயது மாணவருக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பில் இவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அவர் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் இடம்பெறவுள்ளன.

அதேவேளை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூடைப் பந்து பயிற்சியாளரான கோட்டி ஹின்ட்ல் (Codie Hindle) என்பவர் மூன்று இளம் போட்டியாளர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் கனடாவில் உள்ள ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் 36 விதமான விளையாட்டுத் துறை சார்ந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்