உலகம் செய்திகள்

சிரியாவில் கடும் குண்டுவீச்சியில் 28 பேர் பலி

01 Oct 2017

 6 ஆண்டுகளை கடந்து அங்கு இந்த சண்டை நீடித்து வருகிறது. இதற்கிடையே ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றொரு பக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் மாகாணத்தில் சண்டையில்லா பாதுகாப்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான குண்டுவீச்சு நடந்துள்ளது. இந்த குண்டுவீச்சில் 4 குழந்தைகள் உள்பட 28 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி எல்லை அருகே அமைந்துள்ள அமானாஜ் கிராமத்தில் இந்த குண்டுவீச்சு நடந்துள்ளது.

இது பற்றி இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிற சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று கருத்து தெரிவிக்கையில், “அப்பாவி மக்கள் மீது குண்டு வீச்சு நடத்தியது சிரியா அதிபரின் போர் விமானங்களா அல்லது அவரது நட்பு நாடான ரஷிய விமானங்களா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை” என்று கூறியது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV