இலங்கை செய்திகள்

சின்னத்தை மாற்றினால் தோல்வியடைய வேண்டி வரும் - நவீன் திசாநாயக்க

14 Feb 2020

யானைச் சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலட்சினையை மாற்றுவது தொடர்பில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடமளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய இலட்சினையில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் அதனை பழக்கப்படுத்த காலம் எடுக்கும் என்றும் இதனால் கிடைக்கவுள்ள வாக்குகளை கூட இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்கள் யானை சின்னத்தில் வாக்களிக்க பழகியுள்ளதால் வேறு சின்னத்தை முன்வைத்தால் குழப்ப நிலை தோன்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்