இலங்கை செய்திகள்

சிங்கள மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ சிப்பாய்!

10 Jul 2018

வவுனியாவில் இன்று(ஜுலை10) மாலை பாடசாலை முடித்து வீடுநோக்கி பேரூந்தில் சென்ற சிங்கள மாணவிக்கு தொல்லை கொடுத்த பம்பைமடு இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ சிப்பாயை கைது செய்யக்கோரி தமிழ் இளைஞர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியாநகரில் இருந்து செட்டிகுளம் மெனிக்பாம் நோக்கி இபோ.ச பேரூந்து பயணித்துக்கொண்டிருந்த சமயம் காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியொருவரும் பயணித்துள்ளார்.
இந் நிலையில் அவரது இருக்கைக்கு அருகில் அமர்ந்துகொண்டு பம்பைமடு இராணுவ முகாமை சேர்ந்த  இராணுவ சிப்பாய் மாணவிக்கு தொடர்ச்சியாக அங்க சேட்டை செய்தவண்ணமிருந்ததுடன் தொலைபேசி இலக்கத்தையும் தருமாறு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனைப்பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி பாரிய சத்தத்துடன்; அழுததுடன்; பயணிகளிடமும் முறையிட்டுள்ளார்.
இந் நிலைiயில் இராணுவ வீரர் பேரூந்தில் இருந்து தப்பியோட முற்பட்டபோதிலும் பேரூந்தின் சாரதி துரத்திப்பிடித்து குருமன்காட்டில் உள்ள பொலிஸ் காவலரணில் ஒப்படைத்திருந்தார்.


எனினும் சிறிது நேரத்தில் இராணுவ சிப்பாயய் அப்பகுதியில் இல்லாமையினால் அங்கு கூடிய தமிழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிச்செல்ல விட்டுள்ளதாக அங்கிருந்த பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்டனர்.
இதன்காரணமாக போக்குவரத்து மன்னார் வீதியில் சில மணி நேரம் பாதிப்படைந்திருந்தது.
இந் நிலையில் குறித்த காவலரணில் இரந்த பொலிஸார் தாம் இராணுவ சிப்பாயை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த போதிலும் பொதுமக்கள் முரண்பாட்டை நிறுத்தாமையினால் அங்கு 10 இற்கும் மேற்பட்ட பொலிஸார் வரவழைக்கப்பட்டு  முரண்பாட்டை தணிக்க முற்பட்டனர்.


பின்னர் குறித்த சிப்பாய்  வவுனியா பொலிஸ் நிலையத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள்வுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சிப்பாயை காட்டுமாறு கோரியிருந்தனர். எனினும் அதற்கு மறுத்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.


இந் நிலையில் பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி சிப்பாயை கைது செய்துள்ளதாக பொதுமக்களுக்கு தெரிவித்தையடுத்து  பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்னர்.


இந் நிலையில் மாணவியிடமும் பேரூந்தின் சாரதி, நடத்துனரிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை மாணவியின் பாதுகாப்பு குறித்து வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஜெ.ஜெயகெனடி உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாரிடம் மாணவியின் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

படங்கள் நன்றி - R.S. ரஞ்சன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்