இலங்கை செய்திகள்

சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழர் பிரச்சினைக்கு தீர்வு - நவீன் திஸாநாயக்க

13 Aug 2019

சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முல்லைத் தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்