இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்பு

24 Nov 2021

விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் சாவகச்சேரி மந்துவிலில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்பிற்குள் இருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணிக்குள் பெருமளவான வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் நடத்திய போதே , நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

புலிகளின் தயாரிப்பான டாங்கி எதிர்ப்பு நிலக்கண்ணி வெடிகள், அம்மான் – 3, 23 மிதிவெடிகள், 3 கிளைமோர் குண்டுகள், ரி 56 ரக துப்பாக்கி மகஸின்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam