இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் விடுதலைப்புலிகளின் சீருடையும் வெடிபொருட்களும் மீட்பு

13 Mar 2018

யாழ். சாவகச்சேரி பகுதியில், விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக  கருதப்படும் சீருடையும், வெடிப்​பொருட்களும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்குழாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியாளர்களுக்கு குறித்த பொருட்கள் கிடைத்துள்ளதுடன் இதனையடுத்து அவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, விடுதலைப்புலிகளின் சீருடையின் மேல் பகுதி ஒன்றும்,2 வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV