இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை அன்றாடம் பார்வையிட்டுச் செல்லும் மக்கள்

14 Aug 2019

அம்பாறை சாய்ந்தமருது, வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மற்றும், உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்துச்சென்றுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்பு சோதனைக்காக குவிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ உயரதிகாரிகளின் சில குடும்ப உறுப்பினர்களும் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட முயற்சி செய்தமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைக் காலமாக குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான வீட்டை கண்காட்சி பொருளாக வெளிமாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிலர் கூட்டிச் சென்று காட்டுவதாக பணமும் அறவிட்டுள்ளதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகின்றது. 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்