உலகம் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி F அறிமுகம்!

08 Nov 2018

சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி F இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மொடல் போனான கேலக்ஸி F,இன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் சாம்சங் நிறுவன மாநாட்டில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வானதுசாம்சங் நிறுவனத்தின் அதிர்காரபூர்வ யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

 

இது மடக்கப்பட்ட நிலையில் 4-இஞ்ச் ஸ்மார்ட்போனாகவும், திறந்த நிலையில் 7-இஞ்ச் டேப்லெட் போன்றும் இயங்கும்.

 

புதிய மடக்கக்கூடிய சாதனத்தை ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தின் உற்பத்தி நவம்பர் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது . முதற்கட்டமாக ஆண்டிற்கு ஐந்து முதல் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது.

 

7 இஞ்ச் டிஸ்பிளே,இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி, மற்றும் 512 ஜிபி இன்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்