இலங்கை செய்திகள்

சஹ்ரானுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் கைது

13 Jun 2019

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இந்திய விசாரணை பிரிவினார் நேற்று  தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் 7 பகுதிகளில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கொயம்பத்தூர் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் சுற்றிவளைப்பின் போது 14 கையடக்க தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள், 3 லொப்டொப் கணனிகள், 13 இருவட்டுகள் டொங்கல் மற்றும் மேலும் பல காகிதங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட மொஹமட் அசாருதீன் என்பவர் சஹ்ரான் ஹசீமுடன் முகநுால் ஊடாக தொடர்பு வைத்திருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்