உலகம் செய்திகள்

சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

24 Jan 2020

சீனாவில் கொரோனா வைரசால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த 38 வயது இந்திய செவிலியர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.


இந்நிலையில், கேரள நர்சுகள் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனரா என சவுதி அரேபியா அரசிடம் கேட்டு விளக்கவேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக, பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், சவுதியில் கேரள நர்சுகள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அவர்களை தாக்கி உள்ளதா? என்பதை சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் என  இதுவரை சவுதி அரேபியாவில் பதிவாகவில்லை என   சவுதி அரேபியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.

சவுதிஅரேபியா  சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனம் நாட்டில்  கொரோனா வைரஸ் பாதிப்பு  எதுவும் இல்லை என்று கூறி உள்ளது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்