இலங்கை செய்திகள்

சர்வதேசத்திடம் நிதிகளைப் பெற்று போதைப் பொருள்களை அனுப்பிய மகிந்த --அமைச்சர் விஜயகலா

10 Feb 2019

மகிந்த அரசு ஆட்சியில் இருக்கும் போது அபிவிருத்திக்கென சர்வதேசத்திடம் நிதிகளை பெற்று  வட. கிழக்கிற்கு   போதை பொருட்களையே அனுப்பியது என்று கல்வி  இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.வடமராட்சி மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது 

இன்று நான் பல பாடசாலைகளுக்கு சென்றுள்ளேன்.        வட கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்திலும்  பல பாடசாலைகள் உள்ளன.  முப்பது வருட யுத்தத்தில் பாடசாலைகள் பாதிக்கப்படவில்லை.  கல்வி பாதிக்கப்படவில்லை ஆனால் இன்று மாணவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகிறார்கள். 

பாடசாலைகளில் சரியான கல்வி   இன்மை  உடற்பயிற்சிக்கு  சரியான மைதானம் இல்லாமை போன்றவற்றால் பல  இளைஞர்கள்  வீதிகளிலே தமது பொழுதுகளை  கழிக்கின்றார்கள். இதனால் பல மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர்.      

கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதாக சர்வதேசத்திடம் உதவி பெற்று வடக்கு கிழக்கு பகுதிகளில் போதைவஸ்தையே அனுப்பியுள்ளார்கள்.  இந்த நல்லாட்சி அரசு வந்தபின் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பல பெட்டிக்கடைகள் அகற்றப்பட்டுள்ளன. போதைவஸ்திலிருந்து இஞைர்களை பாதுகாத்துள்ளோம்.       

அதேபோல் நல்லாட்சி அரசாங்கம்  ஊடாக.  அரச    படைகள் வசமிருந்த பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.  கடந்த அரசு யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கை அபிவிருத்தி  செய்வதாக கூறி ஏனைய ஏழு மாகாணங்களையுமே  துரித அபிவிருத்தி செய்திருக்கிறார்கள்    

இப்படி ஒரு பாதிக்கப்பட்ட மாகாணமாகவோ மாவட்டமாகவோ காணப்படவில்லை. உண்மயிலேயே  வடக்கு கிழக்கு பிரதேசம் இயற்கையாலும்  யுத்த அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் ஆகும். 

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் படையினர் வசமிருந்த  5000 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது.      வடக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்காக 6000 மில்லியன் நிதியை இதுவரை செலவளித்துள்ளது.  அதேபோல் பல அரசியல் கைதிகளை விடுவித்திருக்கின்றோம்.    அதேபோல் பல வீதிகளை புனரமைத்துள்ளோம்.  தற்போது 950 km. நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.  

இதேபோல் பல கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்துள்ளோம் இன்னும் எத்தனையோ கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாமலும் முகாம்களில் மக்கள் இருக்கின்றார்கள்.  அவர்களுக்கு மலசல.கூட பிரச்சினைகள் இருக்கின்றன.குடிநீர் பிரச்சினைகள் இருக்கின்றன இவைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்பட்ட வேண்டி இருக்கின்றது. அதேபோல்.எங்களுடைய பாடசலைகள் நிறைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டி இருக்கின்றது. 

வடக்கு கிழக்கு உட்பட்ட எமது மாகாணங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்க வேண்டும்..ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை தங்களுடைய மாகாணங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.வேலை வாய்ப்பை பாருங்கள் அபிவிருத்திகளை பாருங்கள் எல்லாம் தங்களுடைய பகுதிகளைத்தான் அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். 

அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்கள் படித்த பாடசாலைகளில் பல கட்டடங்கள் தளபாடங்கள் மற்றும் வளங்கள் குவிக்கப்பட்டுள்ளன ஆனால் நான் படித்த பாடசாலை இன்னும் அதேபோல் தான் உள்ளது.அப்படி யாரும்  செய்யக் கூடாது. பல அரசியல்வாதிகள் தத்தமது பகுதிகளையே அபிவிருத்தி செய்கிறார்கள் பல இடங்கள் இன்னும் அபிவிருத்தியில் பின்தங்கியே காணப்படுகின்றன.     

தனது கல்வி இராஜாங்க அமைச்சு ஊடாக தொகுதி ரீதியாக மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டும்   ஆரம்ப கல்வி முதல்  உயர் கல்வியையும் ஒரே பிரதேசத்தில் கற்கக். கூடிய. வகையிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு தேசிய பாடசாலை அமைக்கும் பணிகள் தமது  அமைச்சினூடாக மேற் கொள்ளவுள்ளோம் என்றார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்