இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கப்படும் - அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

13 Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை காலை  நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர், ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டடிருந்த குழப்பநிலையின்போது, பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க, வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் பதிவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அதனை அகற்றுவதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று நாளைமறுதினம்  இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்