கனடா செய்திகள்

சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

12 Feb 2019

எட்மன்டன் பகுதியிலுள்ள Jasper Place உயர்நிலை பாடசாலையில் சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Jasper Place உயர்நிலை பாடசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அறிக்கை மற்றும் அதுதொடர்பான ஒளிப்படங்கள் என்பவற்றை ஆதாரமாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம், பாடசாலை மாணவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இது குறித்த மேலதிக தகவல்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக் காலமாகவே கனடாவிலுள்ள பிரபல பாடசாலைகளில் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று குற்றம் சுமத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்