இந்தியா செய்திகள்

சத்தீஷ்காரில் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!

08 Nov 2018

சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்ட அபினாந்த் பதாக் பிரசாரம் செய்ய களம் இறக்கியுள்ளது. நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர், தண்டேவாடா, ஜாக்தால்பூர் மற்றும் கோன்காடாகான் பகுதிகளில் தீவிரமாக காங்கிரசுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். பிரதமர் மோடியை போன்ற தோற்றம் கொண்டவர் அவரைப்போன்றே மித்ரா என்றழைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய், வளர்ச்சிக்காக காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் மேற்கொள்கிறார். அபினாந்த் பதாக் பா.ஜனதாவில் இருந்தவர். கடந்த மாதம் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இப்போது அவரை தீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் இறக்கியுள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்