கனடா செய்திகள்

சட்பரியில் காணாமல் போன குழந்தை மீட்பு

15 May 2019

இன்'று அதிகாலை சட்பரி பொலிசார் ஒரு விழிப்புனர்வு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.
மூன்று வயதான வில்லியம் ரூடென் என்கின்ற குழந்தையை அவரது தாயாருடன் காணவில்லை என்கின்ற அறிவிப்பாக அது இருந்தது.

இன்று காலை 6.30 மணியளவில் ரொறன்ரோவில்  அந்தகுழந்தை தாயாருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
அவர்கள் இருவரும் பயணித்த பேரூந்தில் பயணித்த பெண்மணி ஒருவர் பொலிசாருக்கு கொடுத்த தகவலினை வைத்தே பொலிசார் அக்குழந்தையை மீட்டனர். எதற்காக தாயாருடன் அக்குழந்தை புறப்பட்டது என்ன காரணத்திற்காக இந்த விழிப்புனர்வு எச்சரிக்கை என்பது பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்