இலங்கை செய்திகள்

சட்டவிரோத மண்ணகழ்வு பகுதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பார்வையிட்டது (படங்கள் இணைப்பு)

14 Sep 2018

சட்டவிரோதமாக மண்ணகழ்வு மேற்கொள்ளப்படும் பகுதியை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பார்வையிட்டது.


கிளிநொச்சி வட்டக்கச்சி, பன்னங்கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேரில் பார்வையிட்டது.

 

குறித்த பகுதியில் இன்றயதினம் சட்டத்திற்கு முறனாக மண் ஏற்றிய சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணைக்கு எடு்துக்கொண்ட மன்று குறித்த பகுதியை நேரடி பார்வையிட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து குறித்த பகுதிக்கு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் சிவபாளினி சண்முகராஜ் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இதன்போது இப் பகுதியில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக அகளப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மண் ஏற்றும் பகுதிகள் இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றினால் அடையாளமிடப்பட்டது.

  இந்த பகுதியில் ஆங்காங்கே பெருந்தொகை மணல் திட்டுக்கள் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பார்வையிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையினை தாயாரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

அண்மைக்காலமாக கிளிநொச்சியில் சட்டவிரோத மண்ணகழ்வு அதிகரித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களில் செய்தி வந்ததுடன், கடந்த 11ம் திகதி கிளிநாச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் மண்ணகழ்வு இடம்பெறுகின்றமை தொடர்பில் விவசாயிகளினால் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேந்திர குணரட்ண அவர்கள் விசேட பொலிஸ் குழு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தமையும் குறிப்பிடதக்கதாகும்.

படங்கள்: R. S. ரஞ்சன்

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV