இந்தியா செய்திகள்

சட்டசபையில் ஜிஎஸ்டி மசோதா இன்று நிறைவேற்றம்

19 Jun 2017

தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் கூடியது. அப்போது, மத்திய அரசின் ஜிஎஸ்டி மசோதாவை, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார். தி.மு.க உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு நாள்கள் (சனி, ஞாயிறு) சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

 இந்நிலையில், இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மதுவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப உள்ளன.

 அதேபோல, ஜிஎஸ்டி மசோதாவும் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு தி.மு.க கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்