இலங்கை செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

18 Sep 2023

சீதுவையில் பயணப் பையொன்றில் இடப்பட்டு  வீசப்பட்டிருந்த  நிலையில் ஆண் ஒருவரின்  சிதைந்த சடலம்  அண்மையில் மீட்கப்பட்டது.  இது தொடர்பான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.  சீதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிதிகொட  பிரதேசத்தில் தடுகம் ஓயாவின் கரையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டது.

சடலத்திற்குரியவர் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகவர் என்றும்,  இவர்  மாரவில பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.குறித்த நபர்   வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி  பலரிடமிருந்து   பணத்தை மோசடி செய்தவர் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய வீட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியேறியவர் இவ்வாறு காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam