இந்தியா செய்திகள்

சசிகலா தரப்பு கார்கள் மீது தாக்குதல்!

15 Feb 2017

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி  ஆகியோர் சரண் அடைந்தனர். இந்நிலையில் அப்போது, தமிழ்நாடு பதிவு எண்ணுடன் சசிகலா தரப்பில் சென்ற ஐந்து கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

குறிப்பாக, அவற்றில் சசிகலாவுக்கு உடைகளை எடுத்துச் சென்ற ஒரு காரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்