இந்தியா செய்திகள்

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

17 Feb 2017

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டத்துக்கு புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் இந்தப் புகாரை அளித்திருந்தனர். 

இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  அதன்படி, வருகின்ற 28ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதில் தரவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சசிகலா தற்போது உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்