இலங்கை செய்திகள்

சகல அடிப்படைவாத அமைப்புக்களும் தடைசெய்யப்படும் - ருவன் விஜேவர்தன

21 Apr 2019

நாட்டிற்குள் காணப்படும் சகல அடிப்படைவாத அமைப்புக்களையும் அடுத்துவரும் நாட்களில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று   பல பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த சகலரினதும் இறுதிக் கிரியைகள் அரச செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முடிந்தவரை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அவசர நிலைமைகளின் போது சகலரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.  


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்