14 Sep 2022
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை நாம் கேள்வி பட்டிருப்போம் .
அதே போல், அந்த காலத்துல இன்னொரு எழுத படாத சட்டமும் இருந்தது .அதாவது ,ஊரில் கோயில் கோபுரத்தை விட எந்த ஒரு கட்டிடமும் உயரமாக இருக்கக்கூடாது.
இந்த பழமொழிக்கும் ,கூற்றுக்கும் பல விஞ்ஞான ரீதியான காரணங்கள் உண்டு .
வாஸ்து சாஸ்திரம்,வீட்டு கட்டிட கலைக்கான விதி.அதே போல் கோயில் கட்டிட கலைக்கும் ஒரு விதி உண்டு. அது தான் ஆகம விதி இதுதான் அடிப்படை.
இந்த விதியின் அடிப்படையிலே அக்காலத்தில் கோயில்கள் கட்டபட்டன.
கோயில் கோபுரங்கள் உயரமாக இருக்க காரணம் ?
இடி தாங்கி :
தற்போது உள்ள காலகட்டத்தில் உலகம் வெப்பமயமாதல்,சுற்றுப்புற சூழல் கேடு போன்ற பல காரணங்களால் பருவ மழை பொழிவதில் தாமதம் அல்லது எப்படா மழை பெய்யும் என்ற நிலை.
ஆனால் ,அக்காலத்தில் பருவமழை, மாதம் மும்மாரி பெய்யும்.மழையுடன் இடியும் மின்னல்களும் தாக்கும் அபாயமும் இருந்தது.
இங்கு தான் கோபுரத்தின் பணி .ஆம் ,கோபுரத்தின் கலசங்கள் இடிதாங்கியாக பணி புரிகிறது.ஏன்,எப்படி என்பதை அடிப்படையிலிருந்து சொல்கிறேன்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் மக்கள் தாக்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75000 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
சில பெரிய கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.இது தோராயமான கணக்கு தான்.
கோபுரத்தின் உயரம் மற்றும் அகலத்தை பொறுத்து ,கலசங்கள் 1,3,5,7,9,13 என்ற ஒற்றை வரிசையில் அமைந்திருக்கும்.
கலசங்கள் பஞ்சலோகத்தால்(5 Metals) ஆனவை.இவைகள் இடியை ஈர்த்து , தாங்கும் சக்தி படைத்தவை.குறிப்பாக, பஞ்சலோகத்தில் உள்ள ,செம்பிற்கு(Copper) இடியை தாங்கும் சக்தி அதிகம்.
கலசங்களின் வடிவத்திற்கும் காரணம் உண்டு.
கலசங்களின் வடிவம் ,மேல ஊசி போன்ற கூம்பு வடிவத்திலும் ,அதற்கு கீழ கோள வடிவத்திலும் இருக்கும்.
கலசங்கள் செவ்வக வடிவத்திலோ ,சதுர வடிவத்திலோ இருக்காது ?? கோள வடிவத்திலும்,கூம்பு வடிவத்திலும் இருக்க காரணம் என்ன ?
இடி மேலெறிந்து கீழே வரும் போது ,உயரமான இடத்தில் கூர்மையான முனை வழியே இறங்கும் என்பது விஞ்ஞானம். இப்போது உள்ள lightning arresters கூர்மையான வடிவில் இருப்பதை நீங்கள் அறிவீர் .
எனவே தான் , ஊசி போன்ற கூம்பு வடிவம் இடியை இழுப்பதற்காகவும் ,கீழ உள்ள Hollow கோள வடிவம் இடியின் ஆற்றலை விரவி விட்டு,உள்ளிருக்கும் தானியங்களின் (குறிப்பாக வரகு தானியம் ) , உதவியால் ,இடி ஆற்றலை சூன்யம்(Dissolve) ஆக்கும் வேலையை செய்கிறது.
நவதானிய சேமித்தல்
மேல கூறியது போல ,அக்காலத்தில் மழை மும்மாரி பெய்வதால் ஊரே வெள்ளக்காடாய் ஆகி விவசாய நிலங்கள் முற்றிலும் அழியும் வாய்ப்பு அதிகம் .அப்படி ஆகுமேயானால் ,அடுத்த போகத்திற்கு பயிர் செய்ய விதைகள் தேவை அல்லவா ?? அதற்காக தான் நவதானியங்களை கலசத்திற்குள் சேமித்து வைத்தார்கள். சேமிப்பு கிடங்கு(Seeds House) போல.
ஊரிலே பெரிய கட்டிடம்.ஊரே வெள்ளக்காடாய் ஆனாலும் ,கோயில் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் வர போவதில்லை.எப்போது தேவையோ ,கோபுர கலசத்தில் உள்ள நவதானியங்களை உபயோக படுத்திக்கொள்வார்கள் .
இந்த நவதானியங்களுக்கு உயிர் சக்தி 12 ஆண்டுகள் வரை இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.அதனால் தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ,கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தி ,கலசத்தின் உள்ள பழைய நவதானியங்களை அகற்றி,புது நவதானியங்களை வைப்பார்கள்.
சிற்ப கலை
கோவில் கோபுரங்களில் நம் சிற்ப கலையை பறைசாற்றி, உலகத்தையே அண்ணாந்து பார்த்து வியக்க வைத்தது நம் கோயில் கோபுரங்கள்.
கண்காணிப்பு
கோபுரங்களில் ஒற்றை இலக்க(1,3,5,7,9..)மாடங்களை நீங்கள் பாத்திருப்பீர்கள்.ஊரிலே பெரிய கட்டிடமாக இருப்பதால் இதை கண்காணிப்பு கோபுரமாகவும் பயன் படுத்தினார்கள்.
வழிகாட்டி
தற்போது எங்கிருந்தாலும் வழியை கண்டுபிடிக்க Google Maps போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி வந்துவிட்டது .அக்காலத்தில் கோயில் கோபுரங்கள் வழிகாட்டியாக செயல் பட்டன. உயரமாக இருப்பதால் ,பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் ,கோபுரத்தை கண்டு,பின்பற்றி ,ஊரை சென்றடைந்து விடலாம்.
பிரமிட்
இன்று நாம் கட்டும் கட்டிடங்கள் இயற்கை பேரழிவில் சேதம் அடைந்து விடுகிறது .ஆனால் அக்காலத்தில் கட்ட பட்ட கோவில்கள் இன்றும் கம்பீரமாக இருக்க காரணம் ,அக்கால கட்டிட கலையே குறிப்பாக,கோபுரங்கள் பிரமிட் கட்டமைப்பில் கட்ட ட்டிருக்கும்.காரணம் பிரமிட் கட்டமைப்பு,most Balancing structure ஆக விஞ்ஞானிகளால் கருத படுகிறது. எவ்வளவு பேரழிவு வந்தாலும் நிலைத்து நிற்கும் கட்டமைப்பு .
இது வரை நான் கூறியது அனைத்தும் சில விஞ்ஞான காரணங்களே . அதுவும் போக, ஆன்மீக ரீதியான காரணங்களும் உண்டு .
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !!