இலங்கை செய்திகள்

கோட்டாபயவை கூட்டமைப்பினரே கொடூரமானவராக சித்தரிக்கின்றனர் - சரத் வீரசேகர

14 Aug 2019

தமிழ் மக்கள் மத்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொடூரமானவர் என்று கூட்டமைப்பே தற்போது அரசியல் தேவைகளுக்காக சித்தரிக்கின்றது என இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஒரு இனத்தின் தேவைகளுக்காக மாத்திரம் 30 வருட கால சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. யுத்தத்தில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டிய தேவை தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்பட்டது. யுத்த சூழலின் போது விடுதலை புலிகள் தமிழ் மக்களை தங்களின் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக் கொண்டே இராணுவத்தினரை எதிர்க் கொண்டார்கள்.

விடுதலை புலிகளின் பிடிக்குள் அகப்பட்ட தமிழ் மக்களை இராணுவத்தினரே பாதுகாத்தார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அரசியல் ரீதியிலான உரிமைகள் வடக்கு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தலின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டது. அந்த உரிமைகளை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தக்கவைத்துக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்