இலங்கை செய்திகள்

கோட்டாபயவின் பிரச்சார கூட்டத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

09 Oct 2019

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்  முதலாவது பொதுக் கூட்டம் அனுராதபுரம், சல்காது மைதானத்தில்  இடம்பெற்றுள்ளது

இந்தக் கூட்டத்தில்,  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன்,  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்