இலங்கை செய்திகள்

கொஸ்வத்த சம்பவம் தொடர்பில் 31 பேர் கைது

15 May 2019

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், இன்று காலை வரை 31 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையினைப் பெற்றுக்கொள்வதற்காக, வென்னப்புவ பொலிஸ் அதிகாரி, சிலாபம் உப பொலிஸ் அதிகாரி அடங்களாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே, இச் சந்தேகநபர்கள் 31 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்