இலங்கை செய்திகள்

கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

08 Nov 2018

கொழும்பு- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராக்கிரம மாவத்தையில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கிப் பிர​யோகத்தில், தெமட்டகொட ஞானவிமல மாவத்தையைச் சேர்ந்த எம்.ஏ.நிப்ராஸ் (வயது 34)  என்பவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போதே, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்