இலங்கை செய்திகள்

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

09 Oct 2019

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் நேற்று இரவு இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்