உலகம் செய்திகள்

கொல்லப்பட்ட ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் மனைவி சிரியாவில் கைது

08 Nov 2019

பாக்தாதியின்  மரணத்தை ஐ.எஸ். இயக்கமும் உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து பாக்தாதியின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பாக்தாதியின் சகோதரி ரசியா அவாத்தை, கணவர் மற்றும் குழந்தைகளுடன் துருக்கி படையினர் கைது செய்தனர்.


இதைப்போல பாக்தாதியின் மனைவியையும் துருக்கி ராணுவம் கைது செய்துள்ளது. இந்த தகவலை அதிபர் எர்டோகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுரங்கம் ஒன்றில் பாக்தாதி தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் அவரது மனைவியை சிரியாவில் கைது செய்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக நாங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதை தற்போது நான் முதல் முறையாக வெளியிடுகிறேன். பாக்தாதியின் சகோதரி மற்றும் அவரது கணவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்