19 Sep 2023
நபரொருவரை கொடூரமாக கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்..
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் படுகொலை செய்யப்பட்ட நபரை புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.