கனடா செய்திகள்

கொலையாளிக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை

12 Jul 2018

ரொறன்ரோ பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அப்பகுதில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய தேடுதலில், மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ரொறன்ரோ பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பலர் காணாமல் போனதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் Selim Esen, Majeed Kayhan, Soroush Mahmudi, Dean Lisowick, Skandaraj Navaratnam, Abdulbasir Faizi மற்றும் Kirushna Kumar Kanagaratnam ஆகியோர் காணாமற் போனதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய Bruce McArthur என்ற 66 வயதுடைய நபர் மீது கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலின் போது 7 பேரின் உடல்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்