கனடா செய்திகள்

கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் தொடர்பாக விசாரணை

07 Oct 2019

கனடாவின் பியர்ஃபோண்ட்ஸ்-டொலர்டில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் மரியம் இஷாக், யூத-எதிர்ப்பு சுவரொட்டிகளால் குழப்பமடைந்துள்ளார். அவரது பிரச்சார அறிவிப்புகளின் மீது யூத எதிர்ப்பு குறியீடுகள் தொடர்ச்சியாக ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் ஆறு தேர்தல் வெற்றிகளை தவறவிட்ட காழ்ப்புணர்ச்சியால் சில எதிர்தரப்பு விஷமிகளால் தான் ஏன் குறிவைக்கப்படுகிறார் என்று தனக்கு தெரியாது என்று மரியம் இஷாக் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவரின் தேர்தல் பிரசார பதாதைகளின் மேலாக ஹிட்லரின் சுவஸ்டிகா இலட்சினைகள் வரையப்பட்டிருந்தன.

அதேவேளை பிறிதொரு பதாதையின் மீது கனடாவின் பெயர் வெட்டப்பட்டு அங்கு இஸ்ரேலின் பெயர் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது. அந்த சம்பவத்தில் நன்கு அறியப்பட்ட யூத எதிர்ப்பு இணைய நினைவுச் சின்னமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எகிப்தைச் சேர்ந்த காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த மரியம் இஷாக் கூறுகையில், தனது எதிர்ப்பாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆதரவாளர்களிடமிருந்து வரும் ஆறுதலான வார்த்தைகளிலிருந்து மனதை தேற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரது பிரசார பதாதைகளின் மீது ஒட்டப்படும் காழ்ப்புணர்ச்சி மிக்க சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்