இலங்கை செய்திகள்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

19 Mar 2023

கொழும்பு -கொட்டாஞ்சேனை – பரமானந்தா மாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam