இந்தியா செய்திகள்

கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் தீ விபத்து 5 பேர் பலி

13 Feb 2018

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் பழுதடைந்து நின்ற ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான 'சாகர் பூஷண்' கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

கப்பலில் பழுதை சரி பார்த்த போது விபத்து நேரிட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழுது சரிபார்ப்பின் போது கப்பலில்  குழாய் வெடித்து சிதறியது. இதனையடுத்து தீ விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியது. பழுது சரிபார்க்கும் பணி நடைபெற்ற கப்பலில் தீ விபத்து நேரிட்டதில் காயம் அடைந்த 11 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படை தீயை அணைக்கும் பணியை முன்னெடுத்ததை அடுத்து தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் கப்பலை குளிர்விக்கும் பணி நடக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்