உலகம் செய்திகள்

கொசுக்களை மலடாக்கி டெங்கு நோயை ஒழிக்கும் ஆய்வில் வெற்றி!

12 Jul 2018

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட டெங்கு கொசுக்களை மலடாக்கியதன் வழி டெங்கு காய்ச்சல் பரப்பப்படுவதை 80 வீதம் வரை ஒழிக்க முடியும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CSIRO என்றழைக்கப் படும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் இயக்கத்தின் ஆய்வாளர்கள், கடிக்கும் தன்மை கொண்டிராத ஆண் ஏடிஸ் கொசுக்களை ஜேம்ஸ் கூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கூடத்தில் வைத்து அவற்றின் மீது சோதனைகளை நடத்தி வந்தனர்.

‘வால்பாஷியா’ கிருமியினால் தாக்கப் பட்டதால், அந்த ஆண் ஏடிஸ் கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண் கொசுக்கள் அதன் பின்னர், குயின்ஸ்லாந்தில் உள்ள இன்னிஸ்பேய்ல் என்ற பகுதியில் பறக்கவிடப் பட்டன.

அந்த ஆண் கொசுக்கள் கடந்த மூன்று மாதங்களாக பெண் கொசுக்களுடன் உறவு வைத்துக் கொண்டன. முட்டையிட்ட பெண் கொசுக்களுடன் அந்த ஆண் கொசுக்கள் உறவு கொண்டன.

ஆனால், அந்த முட்டைகளிலிருந்து கொசுக் குஞ்சுகள் பொரிக்கவில்லை. இதனால், அந்தக் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கவில்லை.
இந்த மலட்டு ஆண் கொசுக்களை உருவாக்கியதன் வாயிலாக, அந்தப் பகுதியில்டெங்கு காய்ச்சல்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

இது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஜேம்ஸ் கூக் பல்கலைக்கழகத்தின் கைரன் ஸ்டவுண்டண்ட் கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்