இலங்கை செய்திகள்

கே.வி. தவராசா ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம்

06 Dec 2018

இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணியாக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் நியமனம் பெற்றுள்ளார்.

38 வருட காலமாக சட்டத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக ஜனாதிபதி சட்டத்தரணியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவராசா பல்வேறு மனித உரிமைகள் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனம் பெற்றனர். இவர்களில் இரு தமிழர்களும் இரு முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்குகின்றனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்