இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் இல்லை - சுமந்திரன்

12 Feb 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்