இந்தியா செய்திகள்

குழந்தைகளின் பல் சொத்தை நோய் - ஆய்வில் தகவல்

08 Sep 2019

இந்தியாவில் அதிகமான பேருக்கு பற்களில் வெள்ளை புள்ளிகள், கிருமிகள், ஈர் வீக்கம், வாய் துர்நாற்றம், ரத்தக்கசிவு, பற்களில் துவாரங்கள் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மூன்றில் 2 குழந்தைகள் பல் சொத்தை போன்ற பிரச்சினைகளாலும், பத்தில் 9 பெரியவர்கள் வாய் தொடர்புடைய நோயாலும் அவதிப்படுகின்றனர்.

கிழக்கு மாநிலங்களில் 89 சதவீதமும், மேற்கு மாநிலங்களில் 88 சதவீதமும், வட மாநிலங்களில் 85 சதவீதமும், தென் மாநிலங்களில் 64 சதவீத குழந்தைகளும் பல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

நகரங்களை எடுத்துக் கொண்டால் அதிகபட்சமாக கொல்கத்தாவில் 93 சதவீதமும், மும்பையில் 90 சதவீதமும், ஐதராபாத்தில் 82 சதவீதமும், டெல்லியில் 79 சதவீதமும், சென்னையில் 60 சதவீதமும், பெங்களூரில் குறைந்தபட்சமாக 46 சதவீத குழந்தைகளும் பாதிப்படைந்து வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தங்களது குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இல்லாததே இந்த குறைபாடுகளுக்கு காரணம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்