வாழ்வியல் செய்திகள்

குட்டித்தூக்கம் நல்லதா கெட்டதா?

16 May 2019

நம்மவர்களில் நிறைய வகையான ஆட்கள் உள்ளனர். அதில் இந்த தூங்குமூஞ்சி பழக்கம் உடையவர்கள் உள்ளனர்.  சிலர் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அன்றாட வேலைகளை பார்ப்பார்கள்.  சிலர் 7 மணி வரைக்கும் நன்றாக உறங்கிவிட்டு மெதுவாக எழுந்து வேலை செய்வார்கள்.  அவரவர் இரவு வேலை பகல் வேலையைப்பொறுத்து அவரவர் தூக்கமும் அமைகின்றது.

 

மொத்தத்தில் ஒரு மனிதன் நன்றாக 24 மணிநேரத்தில் எட்டு மணி நேரம் உறங்கவேண்டும். இவ்வாறு உறங்கினால் தான் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைக்கும். இதை விட இன்னொரு பழக்கம் உள்ளவர்கள் உள்ளனர் அவர்கள் எங்கடா நேரம் கிடைக்கும் அப்படியே கொஞ்சம் கண்ணயரலாம் என்று அலுவலகத்தில், பாடசாலைகளில், பேருந்து பயணங்களில் என்று பகல்வேலைகளில் உறங்குகின்றனர்.  இது தவறா?

 

ஒரு பூனை தனது ஒரு நாளில் 15 மணிநேரத்திற்கும் அதிகமாக உறங்கியே கழிக்கும்.  அதனால் தான் அதன் சுறுசுறுப்பு அதிகம்.  பூனையை விட வேகமாக ஓடும் எலியை பிடிப்பதற்கு சாமர்த்தியம் வேண்டுமல்லவா.  அதுபோல் இந்த குட்டித்தூக்கம் தேவைதான். ஆனால் அலுவலக நேரத்தில் இதெல்லாம் செய்தால் மேலிடம் தங்களை தவறாக எடுத்துக்கொள்ளும்.

 

இந்த குட்டித்தூக்கம் குறைந்தது அரை மணி நேரம் என்று இருக்கவேண்டும்.  இதற்குமேல் போனால் அயர்ந்து தூங்கிவிடுவீர்கள்.  இதனால் யாராவது உங்களை எழுப்ப வேண்டும். பின் எழுந்தாலும் தட்டுத்தடுமாறி பழைய நிலைமைக்கு மாற சற்று நேரம் ஆகும்.

 

இதனால் குட்டித்தூக்கம் போடும் போது அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.  மதிய உணவு உண்டபின் சிறுது தூக்கம் போடலாம் இது உற்சாகத்தை கொடுக்கும். நிறைய வேலைகளை இருக்கும் போது மூளைக்கு ஓய்வு கொடுத்து பின் செயல்படுத்துங்கள்.  ஆனால் தூக்கமே நமது வாழ்க்கையாக கூடாது குறைந்தது எட்டு மணிநேரம் அதிகமாக 9 மணிநேரம் மட்டுமே உறங்கவேண்டும்.  இல்லையேல் உடல் சுகம் கண்டுவிடும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்