இந்தியா செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல்

12 Feb 2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர்,  தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.  

இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மசோதாவை  மாநிலங்களவையில் அறிமுகம் செய்வார் என தெரிகிறது. 
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்