இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக ஹர்த்தாலுக்கு அழைப்பு

10 Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக நாளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

”ஜனாதிபதியே பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு” என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான துண்டுப்பிரசுரம், கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் அமைப்பின் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்