இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பில் இன்று ஹர்த்தால்

11 Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  காலை முதல் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பாடசாலைகளும் மாணவர்கள் வரவுகள் இன்மையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளதுடன் அரச நிறுவனங்கள் மக்கள் வரவின்மையினால் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவரும் நிலையிலும் மக்கள் வரவு குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது. எனினும் முஸ்லிம் பிரதேசங்களில் அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோன்று நடைபெறுகின்றன. 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்