இலங்கை செய்திகள்

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

12 Jun 2019

கிளி மாவட்ட மக்கள் அமைப்பினால் கடந்த ஜீன் 8ம் திகதி 1001 துவிச்சக்கர வண்டிகள் கிளிநொச்சி பிரதேச பாடசாலை மாணவர்களிற்கு கையளிக்கப்பட்டது.

 துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளி மாவட்ட மக்கள் அமைப்பால் 500 துவிச்சக்கரவண்டிகள் சேகரித்து பாடசாலை செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது, திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களிலேயே பலராலும் இது வரவேற்கப்பட்டு உதவிகள் கிட்டியதன் பயனாக 1001 துவிச்சக்கர வண்டிகள் சேகரிக்கப்பட்டது.

1001 துவிச்சக்கர வண்டிகளை புலம்பெயர்ந்து வாழும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகள், ஏனைய பிரதேசத்தை சேர்ந்த கொடையாளிகளின் பங்களிப்புடனும், தாயக தொண்டர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடனும் மாணவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட கிளிநொச்சி வளாகத்தின் பீடாதிபதி அற்புதராஜா உள்ளிட்ட பல கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்