இலங்கை செய்திகள்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

13 Jun 2019

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஜீப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்