இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஊடக சந்திப்பு

14 Sep 2018

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் கிளிநாச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது,

 

ஜெனிவாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சார்பில் கருத்துக்களை முன்வைக்க விசா மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த செய்திகளின் பின்னராவது எமக்கு விசா வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட நாட்டின் தூதரகம் முன்வர வேண்டும் எனவும் சந்திப்பில் குறிப்பிட்டனர்.

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவது தொடர்பிலும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். குறித்த அலுவலகம் அமைக்கும் முன்பாகவே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டது.  6000 ரூபா எமக்கு பெரிதல்ல. அதற்கு மேல் எமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனவும் அவர்களால் குறிப்பிடப்பட்டது.

படங்கள்: R. S. ரஞ்சன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்