இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியிலான வீட்டுதிட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

17 Feb 2017

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் ​நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 

ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத்திட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இங்கு கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவா் ஹி டுங்லாய் மர்கியு, ஜரோப்பிய ஒன்றியம் 2005 முதல் இலங்கையில் பணியாற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்