இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் வழங்கப்பட்டது

13 Sep 2018

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் இன்று கிளிநொச்சியில் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.


 நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட் டு்காசோலைகள் இன்று ஒரு தொகுதியினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.


 இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் அன்னலிங்கம், அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றய தினம் கிளிநாச்சிய மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 252 பேருக்கு  21465990 மொத்தமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.


இன்றய தினம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிற்கு இவ்வாறாக மொத்தமாக 47209083 அறுநூற்று நாற்பத்தேழு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மீள்குடியேற்ற அமைச்சினால் குறித்த நிதி  பகிர்ந்தளிக்கப்பட்டது.

படங்கள் - R.S.ரஞ்சன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV