இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் திலீபன் நினைவேந்தல் ஊர்தி

23 Sep 2022

தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பயணம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை முறிகண்டி பிள்ளையார் ஆலய முன்றலை வந்தடைந்த ஊர்தி, கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று, மக்கள் அஞ்சலிக்காக தரிக்கவுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் பொது சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அக்கராயன் வீதி ஊடாக பயணம் ஆரம்பமானது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் குறித்த ஊர்தி கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam