இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஐக்கியதேசிய கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டது

10 Jul 2018

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க இன்று ஐக்கியதேசிய கட்சியின் அலுவலகத்தினை கிளிநொச்சியில் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி உதயநகர் பகுதியில் அலுவலகம் இன்று (ஜுலை9)திறந்து வைக்கப்பட்டது. இதன்போது இன்றய நாளின் நினைவாக 200 தென்னங்கன்றுகளும் மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட ஐ.தே கட்சியின் அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி அமைச்சர் கட்சி அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில்,
ஐக்கியதேசிய கட்சியின் உருவாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். கட்சிக்கு பெயர் வைத்தது தமிழர் ஒருவர் எனவும், கட்சியின் யாப்பை இயற்றியவரும் தமிழர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விடயத்தை செய்துள்ளார்கள். பிரேமதாச அவர்கள் இலவச வீடுகளை மக்களிற்கு கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். கன்னங்கர அவர்கள் இலவச பாடதிட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர்கள் வாக்களிப்பது எமது கட்சிக்கு. நுவரேலியாவில் அதிகளவில் தமிழ் மக்களும் உள்ளனர். அங்கும் எமது கட்சியே வெற்றி பெறுகின்றது. அதேபோன்று தமிழ் மக்கள் உள்ள பகுதிகள் அனைத்திலும் ஐ.தேகட்சியே வெற்றிபெறுகின்றது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டு கூறியிருந்தார்.

 

படங்கள் நன்றி R.S. ரஞ்சன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்