இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற சி.சிறிதரனின் ஊடக சந்திப்பு

13 Aug 2019

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது  அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

குறித்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ  தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் மக்களை யாருக்கு வாக்களிக்க சொன்னபோது மக்கள் ஒத்துழைத்தது போன்று எதிர்வரும் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் சந்திப்புக்கள் இதுவரை இடம்பெறவில்லை எனவும் , அவர்கள் பேச அழைத்தால் தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசுவோம் எனவும் தெரிவித்தார். இதேவேளை கோத்தபாய ராஜபக்ஷ  ஜனாதிபதியாக தெரிவானால் உங்கள் ஒத்துழைபபு அவருக்கு இருக்குமா என அவரிடம் வினவியபோது, யார் வெல்வார் என்று எதிர்வு கூற முடியாது. ஆனால் யார் வந்தாலும் அவர்களுடன் பேச வேண்டிய நிலை உள்ளது. நாம் பேசுவோம் எனவும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்